பிடோக் குடியிருப்பாளர்கள் இப்போது சாய் சீ பகுதியில் இருந்து அப்பர் ஈஸ்ட் கோஸ்ட் பகுதி வரை சைக்கிளில் பயணம் செய்யலாம். அந்த வட்டாரத்தில் புதிதாக அமைக் கப்பட்டிருக்கும் 13 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட சைக்கிளோட்டக் கட்டமைப்பு அதற்கு வகை செய்கிறது. இதன் மூலம் ஜூரோங் லேக் வட்டாரம், பொங்கோல், பாசிர் ரிஸ் ஆகியவற்றுக்குப் பிறகு சைக்கிளோட்டக் கட்டமைப்பைப் பெற்றுள்ள நான்காவது நகரமாக பிடோக் திகழ்கிறது. மேலும் இயல்பான நடைபாதையிலிருந்து வேறு படுத்திக் காட்டுவதற்காக சைக்கிளோட்ட பாதைகள் சிவப்பு வண்ணத்தில் இருக்கும். அங் மோ கியோவுக்குப் பிறகு இந்தச் சிறப்பு அம்சத்தை பிடோக் பெற்றிருக்கும். ஹார்ட்பீட்@பிடோகில் நேற்று இந்தச் சைக்கிளோட்டக் கட்டமைப்பைத் திறந்துவைத்த மனிதவள அமைச்சரும் ஈஸ்ட் கோஸ்ட் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பின ருமான லிம் சுவீ சே, "இந்தச் சைக்கிளோட்ட பாதையைப் பயன்படுத்துவோர் தங்கள் வீட்டிலிருந்து இந்த வட்டாரத்தின் மற்ற இடங்களுக்கு எளிதில் செல்ல முடியும்," என்றார்.
பிடோக்கில் 13 கிலோ மீட்டர் சைக்கிளோட்டக் கட்டமைப்பு திறப்பு
1 mins read

