'வீகேர்' விழாக்கால உதவி

'வீகேர்' விழாக்கால உதவி

1 mins read
048a8d48-8d01-4660-96fe-709ab40f6a62
-

பரிவுள்ள, ஆரோக்கியமான சமூ கத்தை உருவாக்கும் முயற்சியின் அடிப்படையில் வடமேற்கு சமூக மேம்பாட்டு மன்றம் தனது நட வடிக்கைகளைத் தொடர்ந்து நடத்தி வருகிறது. இம்மாதம் 20ஆம் தேதி (நேற்று) தொடங்கும் இத்திட்டம் அடுத்த மாதம் 15ஆம் தேதி வரை மூன்று வாரங்களுக்கு நீடிக்கும். இதன் மூலம் 60 வசதி குறைந்த குடும்பங்களுக்கு இல்லத்தைச் சீர மைக்கும் பணிகள் செய்து கொடுக்கப்படும். அதோடு, 11 உணவுப் பொருட் கள் அடங்கிய விழாக்கால அன்பளிப்புப் பைகள் வடமேற்கு வட்டாரத்தின் 13 தொகுதிகளில் வசிக்கும் 6,000 வசதி குறைந்த குடும்பங்களுக்கு விநியோகிக்கப் படும். நிறுவனங்கள், உயர்கல்விக் கழகங்கள், பள்ளிகள், தொண்டூ ழிய நல அமைப்புகள், அடித்தள அமைப்புகள் ஆகியவற்றைச் சேர்ந்த 1,600 தொண்டூழியர்கள் அன்பளிப்புப் பைகளை குடும்பங்க ளுக்குக் கொண்டு சேர்க்கும் பணியை மேற்கொள்வர்.

வடமேற்கு வட்டார மேயர் டியோ ஹோ பின்னிடமிருந்து 'வீகேர்' விழாக்கால அன்பளிப்புப் பையைப் பெற்றுக்கொள்கிறார் திருவாட்டி விமலாதேவி (நடுவில்). வலப்பக்கத்தில் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன், ஸெங்ஹுவா தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் லியாங் எங் ஹுவா உள்ளனர். படம்: வடமேற்கு சமூக மேம்பாட்டு மன்றம்