பொங்கல் சமைத்தல், மாடுகளின் கண்காட்சி, வண்ணமயமாக அலங்கரிக்கப்பட்ட மாட்டு வண்டி, கபடி விளையாட்டுப் போட்டி ஆகியவற்றுடன் புக்கிட் பாஞ்சாங் வட்டாரத்தின் பொங்கல் விழா இந்த ஆண்டும் களைகட்டியது. ஜெர்மனி, பிலிப்பீன்ஸ், மியன்மார், சீனா ஆகிய நாடு களைச் சேர்ந்த புதிய குடியேறிகள் உட்பட புக்கிட் பாஞ்சாங் வட்டாரத் தைச் சேர்ந்த 2,000க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் உற்சாகத்துடன் பொங்கல் விழாவில் பங்கேற்றனர்.
வடமேற்கு சமூக மேம்பாட்டு மன்றத்தின் ஆதரவில் புக்கிட் பாஞ்சாங் குடியிருப்பாளர் ஆலோ சனை குழுவும் புக்கிட் பாஞ்சாங் குடியிருப்பாளர் ஒருங்கிணைப்புக் குழுவும் இணைந்து ஏற்பாடு செய்த இந்தப் பொங்கல் விழாவில் பல இனங்களையும் சேர்ந்த 75 பேர் பங்கேற்று பரோட்டா செய்து, பல இன மக்கள் ஆக அதிகளவில் சேர்ந்து பரோட்டா செய்ததற்காக சிங்கப்பூர் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்தனர். அத்துடன், அதிக எண்ணிக்கையில் பிற இனத்தவர் இந்திய பாரம்பரிய உடை அணிந்து வந்திருந்தனர்.
பொங்கல் விழாவில் பங்கேற்றுச் சிறப்பித்த புக்கிட் பாஞ்சாங் குழுத்தொகுதியின் ஆலோசகரும் வடமேற்கு சமூக மேம்பாட்டு மன்ற மேயருமான டாக்டர் டியோ ஹோ பின்னும் மற்றவர்களும் பரோட்டா சாதனை படைத்து மகிழ்கின்றனர். படம்: புக்கிட் பாஞ்சாங் சமூக மன்றம்

