மருத்துவக் கட்டணங்களை வரையறுக்க குழு அமைப்பு

மருத்துவக் கட்டணங்களை வரையறுக்க குழு அமைப்பு

1 mins read

தேசிய அளவில் நியாயமான மருத்துவக் கட்டண வரம்புகளை வரையறுக்க 13 பேர் குழுவை சுகாதார அமைச்சு நியமித்துள்ளது. மருத்துவர்கள், கல்வியாளர் கள், அரசாங்கப் பிரதிநிதிகள், காப்புறுதி, லாபநோக்கமற்ற அமைப்பு களைச் சேர்ந்தோர் இடம் பெறுவர். பொதுவான மருத்துவ சிகிச்சை முறைகளுக்கான முதல் கட்ட கட்டண வரையறை இந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் தயாராகிவிடும் என்று சுகாதார மூத்த துணையமைச்சர் லாம் பின் மின் நேற்று தெரிவித்தார்.

இவை சிங்கப்பூரிலுள்ள அனைத்து மருத்துவமனைகளி லும் மேற்கொள்ளப்படும் 80 முதல் 85 விழுக்காடு சிகிச்சை முறை களை உள்ளடக்கும். முதல் கட்ட வெளியீட்டைத் தொடர்ந்து படிப்படியாக மற்றவற் றுக் கும் இது விரிவுபடுத்தப்படும். மருத்துவ ஆலோசனை, ஆய்வுக் கூட சோதனைக்கான கட்டணங் கள் போன்வற்றுக்கான கட்டண வரையறைகளையும் இது உள் ளடக்கும் என்றார் டாக்டர் லாம். "பரந்துபட்ட நிபுணத்துவத்தின் அடிப்படையில் குழு உறுப்பினர்கள் தே ர் வு செ ய் ய ப் ப ட் டு ள் ள ன ர் . அவர்கள் சுகாதார அமைச்சின் இணையப்பக்கத்தில் உள்ள அறுவை சிகிச்சைகளுக்கான ஒட்டு மொத்த கட்டணங்களை வழிகாட்டியாகக் கொள்வர்," என்று அவர் குறிப்பிட்டார்.