புரிந்துணர்வை வளர்க்க பாவனைப் பயிற்சியும் கலந்துரையாடலும்

புரிந்துணர்வை வளர்க்க பாவனைப் பயிற்சியும் கலந்துரையாடலும்

1 mins read
4e9c5035-487f-4bdb-bdc7-06c0f075d28f
-

பயங்கரவாதம் தலைதூக்கிவரும் நிலையில், சமயங்களுக்கிடையே நம்பிக்கையை வளர்க்கும் நோக்கில் கேலாங் செராய் பல இன, பல சமய நன்னம்பிக்கைக் குழு நேற்று கலந்துரையாடல் ஒன்றுக்கும் பாவனை பயிற்சிக்கும் ஏற்பாடு செய்திருந்திருந்தது. பயங்கரவாத தாக்குதலை எவ்வாறு எதிர்கொள்வது என்பதற் கான பாவனைப் பயிற்சியை 'சியரா இன்டர்நேஷனல் டேக்டிகல் டிரெயினர்ஸ்' நடத்தினர். இவர்கள் பயங்கரவாதத் தாக்கு தல்களினும் ஏற்படும் காயங் களைக் கையாள்வதில் சிறப்புப் பயிற்சி பெற்றவர்கள். பொய்யான ரத்தத்தைப் பயன்படுத்தி பயிற்சி நடத்தப்பட்டது. அடித்தள அமைப்பு தொண்டூழியர்களுக்கு இத்தகைய பயிற்சியை வழங்கிய முதல் தொகுதி இது.

தொடர்ந்து நடைபெற்ற கலந் துரை யாடல் அனைத்து சமய மன் றத்தின் தலைவர் திரு கேசவபாணி யின் உரையுடன் தொடங்கியது. கேலாங் செராய் வட்டாரத்தைச் சேர்ந்த பல சமயத் தலைவர்கள் கலந்துரையாடலில் பங்கேற்றனர்.