உலகில் 2வது இடத்தில் சிங்கப்பூர் மாணவர்கள்

உலகில் 2வது இடத்தில் சிங்கப்பூர் மாணவர்கள்

1 mins read
27a1c4eb-b06d-4550-acc7-7424f0e349a2
-

சிங்கப்பூரில் தொடக்கநிலை நான் காம் வகுப்பு பயிலும் மாணவர்கள், அனைத்துலகத் தேர்வு ஒன்றில் இரண்டாவது இடத்தைப் பிடித் திருக்கிறார்கள். மாணவர்கள் எந்த அளவிற்கு நூல்களை வாசித்து, எவ்வளவு சிறப்பாக புரிந்துகொள்கிறார்கள் என்பதை அந்தத் தேர்வு மதிப்பீடு செய்தது. 'அனைத்துலக வாசிப்பு மற்றும் புரிந்துகொள்ளும் திறனில் முன் னேற்ற நிலை' என்ற அந்தத் தேர்வின் முடிவுகள் சென்ற மாதம் வெளியிடப்பட்டன.

கணினி இணையப் புத்தகங் களை வாசிப்பதிலும் அவற்றை ஊடுருவிச் சென்று ஆராய்வதிலும் மற்ற நாடு களைச் சேர்ந்த தங்கள் சக மாணவர்களைவிட சிங்கப்பூர் மாணவர்கள் சிறந்து விளங்கு கிறார்கள் என்பதை அந்தத் தேர்வு முடிவுகள் காட்டுகின்றன. சிங்கப்பூர் மாணவர்கள் இணைய நூல்வாசிப்பில் அமெ ரிக்கா போன்ற இதர 15 நாடுகளை மிஞ்சிவிட்டார்கள். இணையத்தில் பல தகவல் களைத் தெரிவிக்குமாறு கேட்கும் கேள்விகளுக்கு இந்தத் தேர்வில் மாணவர்கள் பதிலளிக்க வேண் டும். இந்தத் தேர்வில் முதல்தடவை யாக ஓர் அம்சம் சேர்க்கப்பட் டிருந்தது. மாணவர்கள் இணையத் தகவல்களை எவ்வாறு புரிந்து கொள்கிறார்கள் என்பதை தேர்வு மதிப்பிட்டது.

புத்தகங்களைப் படிப்பதில் மாணவர் களுக்கு ஆர்வத்தை உண்டாக்கு வதற்கான வழிகளைப் பற்றி ஃபேர்ஃபீல்டு மெத்தடிஸ்ட் தொடக்கப் பள்ளி தொடர்ந்து சிந்தித்து வருகிறது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்