பொருட்களை விற்க, வாங்க 'ஃபேஸ்புக்'கில் புதிய வசதி அறிமுகம்

பொருட்களை விற்க, வாங்க 'ஃபேஸ்புக்'கில் புதிய வசதி அறிமுகம்

1 mins read

'ஃபேஸ்புக்' வழியாக பொருட்களை விற்பது, வாங்குவது ஆகியவற்றுக்கான 'மார்க்கெட்பிளேஸ்' எனும் வசதி சிங்கப்பூரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 'ஃபேஸ்புக்' செயலியின் அண்மைய பதிப்பில் இந்த வசதிக்கான குறியீட்டைப் பெறலாம். கணினிகளில் 'ஃபேஸ்புக்' பயன்படுத்துபவர்கள் இந்த வசதியைப் புதிய பிரிவாகக் காண்பர். நேற்று அறிமுகம் கண்ட இந்தச் செயல்பாடு அடுத்த இரண்டு வாரங்களில் பயன்பாட்டுக்கு வரும்.

உள்ளூர் இணைய விற்பனைத் தளமான 'கேரசெல்' போன்ற வசதியை 'மார்க்கெட்பிளேஸ்' வழங்கும். பொருட்களைத் தேடுவது, தேர்வு செய்வது போன்ற வசதிகள் அதில் அடங்கும். பொருட்களை விற்பவர்களும் வாங்குபவர்களும் குறுஞ்செய்தி வாயிலாகத் தொடர்புகொள்ளலாம். ஆனால் பணம் செலுத்துவது, விற்ற பொருட்களை விநியோகிப்பது ஆகிய சேவைகளை 'ஃபேஸ்புக்' வழங்கவில்லை.