விபத்து: போக்குவரத்தை முறைப்படுத்த உதவிய வழிப்போக்கர்கள்

விபத்து: போக்குவரத்தை முறைப்படுத்த உதவிய வழிப்போக்கர்கள்

1 mins read
a6bdf3cb-6545-4a5f-9ceb-b12e880e8a88
-

மரினா பேயில் உள்ள சாலைச் சந்திப்பு ஒன்றில் நேற்று ஏற்பட்ட விபத்தைத் தொடர்ந்து அப்பகுதியில் போக்குவரத்தை வழிநடத்துவதில் வழிப் போக்கர்கள் உதவினர். சியர்ஸ் அவென்யூவில் காரும் மோட்டார் சைக்கிளும் நேற்று முன்தினம் மாலை 5 மணியளவில் மோதியதை அடுத்து அங்கு போக்குவரத்தை முறைப்படுத்துவதில் வழிப் போக்கர்கள் உதவினர். மோட்டார் சைக்கிளை ஓட்டிய ஆடவரும் பின்னால் அமர்ந்து சென்ற பெண்ணும் சிராய்ப்புக் காயங்களுக்காக சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர். இருவருக்கும் வயது 25. விசாரணை தொடர்கிறது. படம்: ‌ஷின்மின்