கிட்டத்தட்ட நான்கு மாதங்களுக்குப் பிறகு இந்த ஆண்டின் முதல் ஸிக்கா தொற்று சென்ற வியாழக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 2017, செப்டம்பர் 29ஆம் தேதிக்குப் பிறகு ஏற்பட்ட தொற்று இது என சுகாதார அமைச்சு தெரிவித்தது. அந்த நோயாளி சென்ற செவ்வாய்க்கிழமை வெளிநோயாளி மருந்தகத்தில் சிகிச்சை பெற்றதாகவும் அவரது உடல்நிலை தேறிவருவதாகவும் அமைச்சின் அறிக்கை கூறியது.
பாதிப்புக்கு உட்பட்டவருக்கு எந்த வட்டாரத்திலிருந்து தொற்று ஏற்பட்டிருக்கும் என்பது பற்றி அமைச்சு எதுவும் குறிப்பிடவில்லை. தேசிய சுற்றுப்புற வாரிய இணையப்பக்கத்தின்படி சிங்கப்பூரில் தற்போது ஸிக்கா பாதிக்கப்பட்ட பகுதி என்று எதுவும் குறிப்பிடப்படவில்லை. இம்மாதம் 18ஆம் தேதி கண்டுபிடிக்கப்பட்ட இந்த புதிய ஸிக்கா பாதிப்புச் சம்பவம் தனிப்பட்ட ஒன்று என்று கூறப்பட்டுள்ளது.

