நாய் பிரியர்கள் இவ்வாண்டு சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டத் தின்போது நடைபெறும் விழா ஒன்றில் தங்கள் நாய்களுடன் போட்டிகளில் பங்கேற்கலாம். இவ்வாண்டு சீனப் புத்தாண் டுக் கொண்டாட்டங்கள் நாய் விலங்கை அடிப்படையாக வைத்து அமையும் என்பதால் அடுத்த மாதம் 3ஆம் தேதியன்று கிரேத்தா ஆயர் சதுக்கத்தில் நடைபெறும் நாய்களுக்கான போட்டியில் அதன் உரிமையாளர்கள் தங்கள் செல்லப் பிராணிக்கு அழகான உடைகளை உடுத்தி பங்கேற்கலாம் என்று ஏற்பாட்டுக் குழு தெரிவித் தது.
இயல்பான நாயின் உருவ அள வைக் காட்டிலும் 88 மடங்கு பெரி தான நாய் பொம்மை விளக்குக் கூண்டுகள் சைனாடவுன் வட் டாரத்தில் வைக்கப்படும். சீனப் புத்தாண்டையொட்டி அதன் ஒளியூட்டு இம்மாதம் 27ஆம் தேதி சனிக்கிழமை நடை பெறும். பிரதமர் லீ சியன் லூங் ஒளியூட்டைத் தொடங்கி வைப் பார். ஒளியூட்டு மார்ச் மாதம் 16ஆம் தேதி வரை நீடிக்கும். அப்போது சைனாடவுன் தெருக்களில் கையால் உருவாக் கப்பட்ட 2,188 விளக்குக் கூண் டுகள் காட்சிக்கு வைக்கப்படும். விளக்குக்கூண்டுகளின் வடி வமைப்பை தொடர்ந்து ஏழாம் ஆண்டாக சிங்கப்பூர் தொழில் நுட்ப, வடிவமைப்பு பல்கலைக்கழக மாணவர்கள் செய்துள்ளனர்.

