தேசிய தற்காப்பின் அடித்தளமா கத் திகழும் தேசிய சேவையே நாட்டின் உயிர்வாழ்வுக்கும், வெற் றிக்கும், பாதுகாப்புக்கும் வழிகோ லுகிறது. எனவே, சிங்கப்பூரர்கள் தேசிய சேவையாளர்களுக்குத் தொடர்ந்து ஆதரவளிப்பது முக் கியம் என அதிபர் ஹலிமா யாக் கோப் நேற்று கூறினார். தேசிய சேவையாற்றிய இரு மகன்களின் தாயான அதிபர் ஹலிமா, அவர்களின் தனிப்பட்ட வளர்ச்சி நாட்டின் தற்காப்புக்கும் சமுதாயத்திற்கும் உந்துகோலாக இருப்பதைக் கண்டிருப்பதாக விளக்கினார்.
தெக்கோங் தீவிலுள்ள அடிப் படை ராணுவப் பயிற்சி நிலையத் திற்கு மேற்கொண்ட வருகையின் முடிவில் அதிபர் ஹலிமா பேசி னார். சென்ற செப்டம்பர் மாதம் பதவி ஏற்ற பிறகு சிங்கப்பூர் ஆயுதப்படைப் பிரிவுக்கு அவர் மேற்கொண்ட முதல் அதிகாரத் துவ வருகை இது. "தேசிய சேவையின் முக் கியத்துவத்தை எடுத்துக்காட்ட வும் தேசிய சேவைக்கும் நமது தேசிய சேவையாளர்களுக்கும் ஆதரவு திரட்டவே நான் இங்கு வந்திருக்கிறேன்," என்றார் அவர்.
தெக்கோங் தீவிலுள்ள சிங்கப்பூர் ஆயுதப்படைகளின் அடிப்படை ராணுவப் பயிற்சி நிலையத்துக்கு நேற்று வருகையளித்த அதிபர் ஹலிமா யாக்கோப் (நடுவில்) அங்கு பயிற்சியில் ஈடுபட்ட வீரர்களு டன் உரையாடுகிறார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

