வேலையிடப் பாதுகாப்பு பயிற்றுவிப்பாளருக்கு சிறை

வேலையிடப் பாதுகாப்பு பயிற்றுவிப்பாளருக்கு சிறை

1 mins read

கட்டுமான ஊழியர்களுக்கான வேலையிடப் பாதுகாப்புச் சான்றி தழ்களிலும் பாதுகாப்பு அட்டை களிலும் தவறான தகவல் களை எழுதி, ஏமாற்றிய வேலையிடப் பாதுகாப்பு பயிற்றுவிப்பாளருக்கு இம்மாதம் 18ஆம் தேதி பத்து மாதச் சிறை தண்டனை விதிக்கப் பட்டது. வொர்க் சேஃப் கண்சல்டன்ஸ் நிறுவனத்தின் 52 வயது ராமநாதன் தமிழ்ச்செல்வன், கட்டட, கட்டுமா னச் சான்றிதழ்களையும் பாதுகாப்பு அட்டைகளையும் பயிற்சியில் பங் கேற்காத ஊழியர்களுக்கு விற்றுள் ளார் என்று மனிதவள அமைச்சு நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியது.

கடந்த ஆண்டு ஜனவரி மாதத் துக்கும் மார்ச் மாதத்துக்கும் இடைப்பட்ட காலத்தில் இத்தகைய சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக, வேலையிடப் பாதுகாப்பு, சுகாதாரச் சட்டத்தின் கீழ் ராமநாதன் மீது குற்றம் சுமத் தப்பட்டது.