சிங்கப்பூரில் நேற்று மாலை பெய்த கனமழையால் நாட்டின் பல பகுதிகளில் திடீர் வெள்ளம் ஏற்பட்டதாக பொதுப் பயனீட்டுக் கழகம் தெரிவித்தது. தஞ்சோங் பகாரில் உள்ள கிரேக் ரோடு, ஜாலான் பூன் லே-இன்டர்நேஷனல் ரோடு சந்திப்பு உட்பட பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டதாகவும் அதனால் அந்தச் சாலைகள் போக்குவரத்துக்கு மூடப்பட்டதாகவும் கழகம் நேற்று மாலை 5.15 மணிக்கு தெரிவித்தது.
பின்னர் மாலை 5.25 மணிக்கு அனுப்பிய டுவிட்டர் செய்தியில் பூன் லே வெள்ளம் வடிந்துவிட்டதாகவும் அங்கு போக்குவரத்து வழக்கநிலைக்கு திரும்பிவிட்டதாகவும் கூறியது. பின்னர் கிரேக் சாலையும் போக்குவரத்துக்குத் திறந்துவிடப்பட்டது. யுவான் சிங் ரோடு-யுங் குவாங் ரோடு சந்திப்பிலும் வெள்ள அபாயம் ஏற்பட்டதாக கழகம் சொன்னது.

