பிரதமர் லீ: இலங்கை தடையற்ற வர்த்தக உடன்பாடு சிங்கப்பூர் நிறுவனங்களுக்கு பலனளிக்கும்

பிரதமர் லீ: இலங்கை தடையற்ற வர்த்தக உடன்பாடு சிங்கப்பூர் நிறுவனங்களுக்கு பலனளிக்கும்

2 mins read
29b4543d-fb07-4d86-b12c-30c5cfadd13e
-

சிங்கப்பூருக்கும் இலங்கைக்கும் இடையிலான புதிய தடையற்ற வர்த்தக உடன்பாட்டால் சிங்கப்பூர் நிறுவனங்கள் பயனடையும் என்று பிரதமர் லீ சியன் லூங் செவ்வாய்க் கிழமை கூறினார். சிங்கப்பூர் நிறுவனங்கள் இலங் கைச் சந்தையை அணுக அதிக வாய்ப்புக் கிடைக்கும். ஏற்றுமதிகள், முதலீடுகள் ஆகியவற்றின் வடிவில் இவ்வாய்ப்பு கிடைக்கும் என உடன்பாடு கையெழுத்தான நாளன்று சிங்கப் பூர் செய்தியாளர்களிடம் திரு லீ சொன்னார். "பெரிய முதலீடுகள் திட்டமிடப் படுகின்றன," என்று அவர் குறிப் பிட்டார்.

மாவு தயாரிக்கும் 'ப்ரிமா' நிறுவனம், உள்கட்டமைப்பு நிறுவ னங்களான 'ஹாய்ஃபிளக்ஸ்', 'செம்ப்கார்ப்', சிறிய நிறுவனங் களான 'ஃபூட் ரிபப்ளிக்' ஆகி யவை முதலீடு செய்யத் திட்டமிடு கின்றன. இந்த முதலீடுகள் அனைத்தும் தடையற்ற வர்த்தக உடன்பாட்டால் நன்மை அடையவி ருப்பதாக அவர் கூறினார். தடையற்ற வர்த்தக உடன்பாடு குறித்து இரு நாடுகளுக்கும் இடையில் 2004ஆம் ஆண்டில் நடந்த பேச்சு வார்த்தை தோல்வி அடைந்தபிறகு என்ன மாற்றம் நேர்ந்தது என திரு லீயிடம் கேட் கப்பட்டது. தற்போதைய இலங்கை அர சாங்கம் பொருளியலைச் சீர மைத்து, தாராளமயக் கொள்கை யைக் கடைப்பிடித்து வருவதால் மற்ற நாடுகளுடனான முதலீடுகள், வர்த்தகம், பரஸ்பர சார்புநிலை ஆகியவற்றை உயர்த்த முற்படுவ தாகத் திரு லீ கூறினார்.

இலங்கை நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் திரு ஆர். சம்பந்தன் (இடது), இலங்கைக்கு சென்றிருந்த சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங்கை நேற்று முன்தினம் சந்தித்து பேசினார். வலப்பக்கத் தில் சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன். படம்: தொடர்பு, தகவல் அமைச்சு