டாக்சி ஓட்டுநர்களுக்கு பெட்ரோல் விற்கும் கம்ஃபர்ட் டெல்குரோ

1 mins read

கம்ஃபர்ட் டெல்குரோ போக்குவரத்து நிறுவனம் பெட்ரோல் எரிபொருளால் இயங்கும் தனது டாக்சிகளுக்கும் ஊபர் நிறுவனத்துடனான கூட்டணி உடன்பாடு கையெழுத் தானவுடன் அதன் தனியார் கார்களுக்கும் சேவையாற்றுவ தற்காக பெட்ரோல் நிலையம் ஒன்றைத் திறந்துள்ளது. அந்த பெட்ரோல் நிலையங்களில் ஒன்று சின் மிங் டிரைவில் கடந்த ஓராண்டாக செயல்பட்டு வருகிறது. புக்கிட் பாத்தோக்கில் உள்ள அதன் இரண்டாவது நிலையம் கடந்த ஆண்டு இறுதியில் செயல்படத் தொடங்கியது. கம்ஃபர்ட் டெல்குரோவின் மேலும் இரு பெட்ரோல் நிலையங்களும் விரைவில் இந்தச் சேவையில் சேர்ந்துகொள்ளும். கம்ஃபர்ட் டெல்குரோ நிறுவனம் தனது டாக்சிகளுக்காக 1990ஆம் ஆண்டு முதல் டீசல் எரிபொருளை சலுகை விலையில் விற்று வருகிறது.