அதிபருக்கு உணவு: கனவு நிறைவேறியது

அதிபருக்கு உணவு: கனவு நிறைவேறியது

1 mins read
6e1b975d-3ea5-4650-ac4e-296a59400854
-

சிங்கப்பூரர் என்ற முறையில் அதிபர் ஹலிமா யாக்கோப்புக்கு உணவு சமைத்து பரிமாற வேண் டும் என்பது சமையல் கலைஞர் பால் சைமனின் நீண்டநாள் கனவு. திரு சைமனின் கனவு நேற்று இஸ்தானாவில் நிறைவேறியது. "இந்த வாய்ப்பு கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. டிசம்பரில் எனது ஹோட்டலின் மனிதவளப் பிரிவு என்னை அழைத்து அதிபருக்கு சமைக்க சொன்னபோது நான் அதிர்ந்து போனேன்," என்று கூறினார் ஷங்ரிலா ராசா செந்தோசா ரிசோட் ஹோட்டலில் பணியாற்றும் சைமன். உட ற் குறையு ள்ளோரு க்கான அனைத்துலக தினத்தை ஓட்டி, கடந்த மாதம் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் வெளியிட்ட ஏழு பேரைப் பற்றிய கட்டுரையில் 27 வயது சைமனும் இடம்பெற்றிருந்தார். அக்கட்டுரையில் அவர் தனது கனவு பற்றிக் கூறியிருந்தார். அதைப் படித்து நெகிழ்ந்து போன அதிபர் ஹலிமா, உடனே சைமனின் கனவை நிறைவேற்ற முடிவெடுத்தார்.

தாம் தயாரித்த உணவை அதிபர் ஹலிமா யாக்கோப் சுவைத்து, மகிழ்ந்து, பாராட்டியதை தமக்குக் கிடைத்த பெரும் கௌரவமாகக் கருதும் சமையல் கலைஞர் பால் சைமன். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்