2015 முதல் 2020ஆம் ஆண்டு வரை நிபுணர்கள், மேலாளர்கள், நிர்வாகிகள், தொழில்நுட்பர்கள் ஆகியோருக்காக ஆண்டுக்கு 5,500 புதிய வேலைகளை உரு வாக்கப் புதிய தொழில்துறை உரு மாற்றத் திட்டம் துணை புரியும். அதிவேக வளர்ச்சி அடைந்து வரும் தரவியல், பகுப்பாய்வியல், செயற்கை நுண்ணறிவு ஆகிய துறைகளில் தொழிலாளர்களின் திறனை வளர்ப்பதும் உருமாற்றத் திட்டத்தின் இலக்கு.
நிபுணத்துவச் சேவைத்துறை 2015 முதல் 2020 வரை ஆண் டுக்கு 4.6% வளர்ச்சி அடைந்து, 2020ல் $31 பில்லியன் மதிப்பை எட்டுவதே இதன் நோக்கம் என சட்ட, நிதி மூத்த துணை அமைச் சர் இந்திராணி ராஜா கூறினார். ஊடக, மின்னிலக்க விளம்பரத் தொடர்புக் குழுமமான 'டென்ட்சு ஏஜிஸ் நெட்வொர்க்' நிறுவனத்தின் ஆசிய பசிபிக் தலைமையகத்தின் அதிகாரபூர்வ திறப்பு நிகழ்ச்சியில் அவர் நேற்று பேசினார். நிபுணத்துவச் சேவைகளில் கட்டட வடிவமைப்பு, பொறியியல் சேவைகள், ஆலோசனை, கணக் காய்வு, சட்டம், விளம்பரம் போன் றவை உள்ளடங்கும்.
இந்தத் தொழில்துறைகளைச் சேர்ந்த நிறுவனங்களில் 2016ஆம் ஆண்டு 230,000க்கும் மேலா னோர் வேலை செய்தனர்.

