ஆசியானுக்கும் இந்தியாவுக்கும் இடையில் உறவு ஏற்பட்டு 25 ஆண்டுகள் ஆகின்றன. இதைக் குறிக்கும் வகையில் இந்திய தலைநகர் புதுடெல்லியில் இன்று உச்சநிலை மாநாடு நடக்கிறது. அந்த மாநாட்டில் சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் உட்பட ஆசியானின் 10 நாடுகளின் தலை வர்களும் கலந்துகொள்கிறார்கள். மாநாட்டிற்காக திரு லீ நேற்று புதுடெல்லி சென்றார். தாய்லாந்து, இந்தோனீசியா, புருணை, லாவோஸ், மியன்மார், கம்போ டியா, மலேசியா, பிலிப்பீன்ஸ், வியட்னாம் ஆகிய நாடுகளின் தலைவர்களும் புதுடெல்லி மாநாட்டில் பங்கெடுத்துக்கொள் கிறார்கள், மாநாட்டில் கலந்துகொள்ளும் ஆசியான் தலைவர்கள், நாளை புதுடெல்லியில் நடக்கும் இந்திய குடியரசு தினக் கொண்டாட்டங் களிலும் கலந்துகொள்வர்.
இந்தியா-ஆசியான்: இன்று உச்சநிலை மாநாடு
1 mins read

