கோலாலம்பூர்: பாக்டீரியாவால் பாதிக்கப்பட்டிருந்ததால் 'காலா' சிவப்பு நிற ஆப்பிள், 'கிரான்னி ஸ்மித்' பச்சை நிற ஆப்பிள் ஆகியவை 2015ஆம் ஆண்டில் தடை செய்யப்பட்டிருந்த தகவல் சமூக ஊடகங்களில் தற்போது வலம்வருவதை அடுத்து, அந்த ஆப்பிள் வகைகள் தற்போது உட்கொள்வதற்குப் பாதுகாப்பானவை என மலேசிய அதிகாரிகள் கூறியுள்ளனர். லிஸ்டெரியா மோனோசைடோஜென்ஸ் எனும் பாக்டீரியாவால் பாதிக்கப்பட்டதாகக் கருதப்பட்ட கலிஃபோர்னியா ஆப்பிள்களை மீட்டுக்கொள்வதாக 2015ஆம் ஆண்டு மலேசியா, தாய்லாந்து, பிலிப்பீன்ஸ் ஆகிய நாடுகள் அறிவித்தன. ஆனால், பாதிக்கப்பட்ட அந்த வகை ஆப்பிள்கள் சிங்கப்பூருக்கு இறக்குமதி செய்யப்படவில்லை என சிங்கப்பூர் வேளாண்-உணவு, கால்நடை மருத்துவ ஆணையம் தெரிவித்தது.
மலேசியா அறிவிப்பு: அமெரிக்க ஆப்பிள்களால் பாதிப்பு இல்லை
1 mins read

