ரத்தம் வேகமாகக் கசிவதைத் தடுக்கும் புதிய பருத்தி 'ஏரோஜெல்'

1 mins read

பழைய துணிகளைப் பயன்படுத்தி ரத்தம் வேகமாக கசிவதைத் தடுக்கும் வழிமுறையை சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர்.இந்தப் புதிய கண்டுபிடிப்பின் வாயிலாக அதிக அளவில் திரவங்களை உறிஞ்சும் பருத்தி ஏரோஜெல்லாக பழைய துணிகள் மாற்றப்படலாம். இந்தப் பருத்தி ஏரோஜெல்லை இணைப் பேராசிரியர் ஹாய் மின் டுவோங், பேராசிரியர் நான் ஃபான் தியேன் ஆகியோர் தயாரித்துள்ளனர்.

துப்பாக்கிச் சூடு, ஆழமான வெட்டுகள் ஆகியவற்றினால் ரத்தக் கசிவு ஏற்படும்போது இந்தப் பருத்தி ஏரோஜெல்லால் சாதாரணப் பஞ்சைவிட மூன்று மடங்கு அதிக ரத்தத்தை உறிஞ்ச முடியும். இதனால் அதிக அளவில் ரத்தம் இழந்து, ஒருவர் மரணம் அடையும் அபாயத்தைக் குறைக்க இந்தப் புதிய கண்டுபிடிப்பு உதவ லாம் என்று தெரிவிக்கப்படுகிறது. ஏரோஜெல் முதன்முதலில் 1930களில் தயாரிக்கப்பட்டது. மரம், கிளாஸ் ஃபைபர் போன்ற வற்றால் அது தயாரிக்கப்பட்டது. ஆனால் 'ஏரோஜெல்'லைத் தயாரிக்க அதிகச் செலவாகும் என்பதால் அது அதிக அளவில் பயன்படுத்தப்படுவதில்லை. மேலும் ஏரோஜெல்லைத் தயாரிக்க அதிக நேரமாகும் என்றும் தெரிவிக்கப்பட்டது.