'சன்ஸ்கிரீன்' திரவங்களில் அனுமதிக்கப்பட்ட வரம்புக்குள் 'யுவி'யைத் தடுக்கும் சேர்மங்கள்

'சன்ஸ்கிரீன்' திரவங்களில் அனுமதிக்கப்பட்ட வரம்புக்குள் 'யுவி'யைத் தடுக்கும் சேர்மங்கள்

1 mins read

சிங்கப்பூரில் உள்ள 'சன்ஸ்கிரீன்' எனப்படும் வெயிலிருந்து பாது காக்கும் திரவங்களில் 'யுவி' கதிர்வீச்சைத் தடுக்கும் இயற் கைச் சேர்மங்கள் அனுமதிக் கப்பட்ட வரம்புக்குள் இருப்பதாக சிங்கப்பூர் பயனீட்டாளர் கழகம் அறிவித்துள்ளது. சிங்கப்பூரில் விற்பனை செய்யப்படும் 'சன்ஸ்கிரின்' திரவங்களில் 20 தயாரிப்புகளைக் கழகம் சோதனையிட்ட பிறகு இந்த அறிவிப்பை நேற்று வெளி யிட்டது. 'யுவி' கதிர்வீச்சைத் தடுக்கும் இயற்கைச் சேர்மங்களினால் பயனீட்டாளர்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து அக்கறை கொண்ட கழகம், 'சன்ஸ்கிரீன்' திரவங்களில் உள்ள ஹோமோ சலேட், ஒக்சிபென்சோன், ஒக்டோ கிரிலீன் ஆகிய இயற்கைச் சேர்மங்களின் அளவைச் சோதனையிட்டது.

இந்த இயற்கைச் சேர்மங்களை அளவுக்கு அதிகமாகக் கொண் டுள்ள 'யுவி' கதிர்வீச்சுத் தடுப்பு களால் தோல் ஒவ்வாமைகளும் சுகாதாரப் பிரச்சினைகளும் ஏற்படும் என்று கழகம் கூறியது.