உணவு அங்காடி நிலையங்களில் 'ஈசி லிங்க்' மூலம் பணம் செலுத்தலாம்

உணவு அங்காடி நிலையங்களில் 'ஈசி லிங்க்' மூலம் பணம் செலுத்தலாம்

1 mins read

வரும் ஏப்ரல் மாதத்திலிருந்து இங்குள்ள உணவு அங்காடி நிலையங்களில் 'ஈசி லிங்க்' பயண அட்டை மூலம் பணம் செலுத்தி உணவு வாங்கலாம். தற்போது ஜூரோங் வெஸ்ட்டில் உள்ள உணவு அங்காடி நிலையத்தில் மட்டும் இத்தகைய பணம் செலுத்தும் முறை நடப்பில் உள்ளது. இத்தட்டத்தைத் தீவு முழுவதும் விரிவாக்க 'நெட்ஸ்', 'ஈசி லிங்க்' ஆகிய இரு நிறுவனங்களும் ஒன்றாகச் செயல்பட்டு வருகின்றன. ஆனால் ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு பேருந்து, ரயில் சேவை களுக்குப் பயன்படுத்தும் 'ஈசி லிங்க்' பயண அட்டைகளைப் உணவு அங்காடி நிலையங்களில் உள்ள 'நெட்ஸ்' கருவிகளில் பயன்படுத்திப் பணம் செலுத்த முடியும். உணவு அங்காடி நிலையங் களில் ஒருமித்த ரொக்கமில்லாப் பணம் செலுத்தும் முறையை நடப்பில் கொண்டு வர தாங்கள் கடப்பாடு கொண்டுள்ளதை இந்த நடவடிக்கை காட்டுகிறது என இரு நிறுவனங்களும் தெரி வித்தன.

இத்தகைய ஒருமித்த பணம் செலுத்தும் முறை வேண்டும் என்று கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தமது தேசிய தினப் பேரணி உரையில் பிரதமர் லீ சியன் லூங் குறிப்பிட்டார். ரொக்கமில்லாச் சமூகமாக மாறும் சிங்கப்பூரின் பயணத்தில் வங்கிக் கணக்குகள் இல்லாத மூத்தோரும் மாணவர்களும் பின் தங்கிவிடக்கூடாது என்பதை உறுதி செய்வதாக இரு நிறுவனங்களும் நேற்று வெளியிட்ட கூட்டு அறிக்கையில் தெரிவித்தன.