சிங்கப்பூர் குடிநுழைவு, சோதனைச் சாவடியின் இணையப் பக்கத்தைப்போல போலி இணையப் பக்கம் செயல்படுவது குறித்து ஆணையம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் எச்சரித்தது. evisasg.mom என்ற பெயரில் போலி இணையப் பக்கம் செயல்படுகிறது. இது, பயணிகளிடமிருந்து விசா எண்களையும் கடவுச்சீட்டின் எண்களையும் பெற முயற்சி செய்கிறது என்று அது தெரிவித்தது. இது குறித்து போலிசில் புகார் செய்யப்பட்டுள்ள தாகக் கூறிய ஆணையம், போலி இணையத் தளங்களின் வலையில் வீழ்ந்துவிடாதீர்கள் என்று எச்சரித்தது. ஆணையத்தின் அதிகாரபூர்வமான www.ica.gov.sg என்ற இணையத் தளத்தில் குடிநுழைவு தொடர்பான தகவல்களும் பரிவர்த்தனைக்கான வசதிகளும் இடம்பெற்றுள்ளன.
போலி இணையப் பக்கம்
1 mins read

