போக்குவரத்து மன்றம்: சிறப்புத் தேவை பயணிகளுக்கு உதவ 21 பரிந்துரைகள்

1 mins read

சிறப்புத் தேவைகள் உள்ள பயணிகள் கூடிய விரைவில் பொதுப் போக்குவரத்தில் செல்ல கூடுதல் உதவி பெறக்கூடும். இவர்களுக்காகப் பேருந்து, ரயில் பயணங்களை எளிதாக்கும் பரிந்து ரைகளைப் பொதுப் போக்குவரத்து மன்றம் வெளியிட்டுள்ளது. எடுத்துக்காட்டாக, ரயில் சேவையில் ஏற்படும் தடங்கல் களின் அனைத்து விவரங்களையும் சைகை மொழியில் காட்டும் அவ தாரத்தின் காணொளிச் செயலியை மன்றம் பரிந்துரைக் கிறது. காது கேளாதவர்களுக்கு இச்செயலி உறுதுணையாக இருக்கும்.

எந்தப் பேருந்து வந்தடைந்துள் ளது என்பதைப் பேருந்து ஓட்டு நர்கள் அறிவிக்கலாம் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. பார்வை இல்லாத பயணி களுக்கு இது உதவியாக இருக் கும். பொதுப் போக்குவரத்துப் பயணத்தை மேம்படுத்தும் இரண் டாவது ஆலோசனை அறிக்கை யின்கீழ் மன்றம் நேற்று வெளியிட்ட 21 பரிந்துரைகளில் இவை உள்ள டங்கும்.