ஆசியானின் அடுத்த கட்ட வளர்ச்சி புத்தாக்கத்தில் அமைந் துள்ளது என்று துணைப் பிரதமர் தர்மன் சண்முகரத்னம் நேற்று தெரிவித்தார். ஆசியான் வட்டாரத்தில் முன் னுரிமை அளிக்க வேண்டிய நிதித்துறை தொழில்நுட்பம், மின் னியல் வர்த்தகம் போன்ற பல துறைகளை அவர் பட்டியலிட்டார். டாவோசில் உலகப் பொரு ளியல் கருத்தரங்கில் திரு தர்மன் உரையாற்றினார். அப்போது ஆசியான் வட் டாரத்துக்கான எதிர்கால உத்தி களைப் பற்றி அவர் பேசினார். பூகோளரீதியிலான மாற்றம், வர்த்தகம் மீதான நிச்சயமின்மை, உலகமயமாக்கம், இணையப் பாதுகாப்பு, தீவிரவாதம் போன்ற சவால்கள் இருந்தபோதிலும் ஆசியான் வட்டாரத்துக்கு பெரு மளவில் வாய்ப்புகள் இருப்பதாக வும் அவர் தெரிவித்தார்.
துணைப் பிரதமர் தர்மன் சண்முகரத்னம்.

