மூத்த குடிமக்களின் சேவை களுக்கு செலவாகும் தொகை அதிகரித்துள்ளதால் வரவு செலவு திட்டத்தில் அவர்களுக்கான நிதி ஒதுக்கீடு அதிகரிக்கும் என்று நேற்று நிதி மூத்த துணை அமைச் சர் இந்தி ராணி ராஜா தெரி வித்தார். அதே சமயத்தில் வரிகளை உயர்த்த வேண்டியது குறித்து அரசாங்கம் சிந்திக்க வேண்டியுள்ளது என்று அவர் சொன்னார். வரும் பிப்ரவரி 19ஆம் தேதி நாடாளுமன்றத்தில் இவ் வாண்டின் வரவு செலவு திட்டம் தாக்கல் செய்யப்படுகிறது. அதில் முதியோர் நலன்களுக்கான அம்சங்களில் அதிக அக்கறை செலுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமைச்சர் இந்திராணி ராஜாவின் பேச்சும் இதையே பிரதிபலிக்கிறது. அதிவேகத்தில் வளர்ச்சி அடையும் மூப்படையும் மக்கள்தொகைக்கு பலதரப்பட்ட சேவைகளை வழங்க வளங்கள் தேவை என்று அமைச்சர் வலியுறுத்தினார்.
நிதி மூத்த துணை அமைச்சர் இந்திராணி ராஜா