சிங்கப்பூர் வெள்ளியின் மதிப்பு அதிகரிப்பு

சிங்கப்பூர் வெள்ளியின் மதிப்பு அதிகரிப்பு

1 mins read

அமெரிக்க டாலருக்கு நிகரான சிங்கப்பூர் வெள்ளியின் மதிப்பு மூன்று ஆண்டுகள் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. அமெரிக்க நிதியமைச்சர் ஸ்டீவன் நுச்சின், அமெரிக்க டாலர் பலவீனமாக இருப்பதையே விரும்புவதாகத் தெரிவித்ததால் அமெரிக்க டாலரின் மதிப்பு சரிந்தது. இதையடுத்து சிங்கப்பூர் வெள்ளியின் மதிப்பு அதிகரித்தது. நேற்றுக் காலை 11.09 மணியளவில் ஒரு அமெரிக்க டாலருக்கு 1.306 சிங்கப்பூர் வெள்ளி என்று பரிவர்த்தனை செய்யப்பட்டது. இதற்கு முன்பு 2014ஆம் ஆண்டில்தான் அமெரிக்க டாலருக்கு 1.3044 என்று சிங்கப்பூர் வெள்ளி பரிவர்த்தனையானது.