இன்று, இந்தியத் தலைநகரம் புது டெல்லியில் நடைபெறும் இந்தியா வின் குடியரசு தினக் கொண்டாட்டத் தில் பெருமதிப்பிற்குரிய பத்து வருகையாளர்களை - ஆசியான் நாட்டுத் தலைவர்களை உபசரிக்கும் கௌரவம் 1.25 பில்லியன் இந்தியர் களுக்குக் கிடைத்திருக்கிறது. நேற்று, ஆசியானுக்கும் இந்தியா வுக்கும் இடையிலான 25 ஆண்டு காலப் பங்காளித்துவத்தை முன் னிட்டு நடந்த உச்சநிலை மாநாட்டில் ஆசியான் தலைவர்களை உபசரிக்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது.
பெருந்தகையினரின் இந்த வருகை, ஆசியான் நாடுகளின் ஒப்பீடற்ற நல்லெண்ணத்தைக் குறிக்கிறது. இது சாதாரணமான நிகழ்ச்சியல்ல. மனிதகுலத்தில் சுமார் கால்பகுதியான 1.9 பில்லியன் மக்களுக்கு பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தும் ஆழமான பங்காளித்துவத்தில் இந்தியாவையும் ஆசியானையும் ஈடுபடுத்தியுள்ள குறிப்பிடத்தக்க பயணத்தின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மைல்கல் இந்த நிகழ்ச்சி.
முழுச் செய்தியைப் படிக்க தமிழ்முரசின் இ-பேப்பரை நாடுங்கள்: epaper.tamilmurasu.com.sg

