ஆசியான் - இந்தியா உறவு: 25 ஆண்டுகளும் அதற்கு அப்பாலும்

ஆசியான் - இந்தியா உறவு: 25 ஆண்டுகளும் அதற்கு அப்பாலும்

1 mins read
0b2653d5-d6ab-4566-8015-7bf1ab718327
-

ஆசியானுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான 25 ஆண்டுகால உறவை நாம் கொண்டாடினாலும், தென்கிழக்காசியாவுடன் இந்தியா வுக்குள்ள உறவு 2,000 ஆண்டு களுக்கு மேலானது. இந்தியாவுக் கும் கம்போடியா, மலேசியா, தாய்லாந்து போன்ற நாடுகளுக்கும் இடையிலான பண்டைக்கால வணிகம் விரிவாக ஆவணப் படுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்த ஆரம்பகாலத் தொடர் பின் தாக்கத்தைத் தென்கிழக் காசிய கலாசாரங்கள், பாரம்பரியங் கள், மொழிகள் ஆகியவற்றில் பரவலாகக் காணலாம். கம்போடி யாவின் சியம் ரீப் நகருக்கு அரு கிலுள்ள அங்கோர் ஆலய வளா கம், இந்தோனீசியாவின் யொக் யகார்த்தாவுக்கு அருகிலுள்ள போரோபுடோர், பிரம்பானன் ஆலயங்கள், மலேசியாவின் கெடா மாநிலத்திலுள்ள தொன் மையான ஆலயம் போன்ற வரலாற்றுத் தளங்களில் இந்திய இந்து,- பௌத்த சமயத் தாக்கங்களைக் காணலாம். தாய்லாந்து, இந்தோனீசியா, மியன் மார் உட்பட பல தென் கிழக்காசியக் கலாசாரங் களில் ராமாயணம் ஆழப் பதிந்துள்ளது. சிங்கப் பூரின் மலாய் பெயர் 'சிங்கப்பூரா'. 'சிங்க நகரம்' எனும் சமஸ்கிருதச் சொல்லிலிருந்து தழுவப்பட்ட பெயர் இது.

முழுச் செய்தியையும் படிக்க தமிழ்முரசின் இ-பேப்பரை நாடுங்கள்: epaper.tamilmurasu.com.sg