மூவரைத் தாக்கிய நால்வருக்கு சிறை

1 mins read
be668d9d-a152-4e9c-9700-a1a2d8db0104
-

இரவு விடுதி ஒன்றுக்கு வெளியே, மூவரைத் தாக்கி அவர்களுக்கு காயங்களை விளைவித்த நால்வருக்கு நேற்று சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. சகோதர்களான 24 வயது ஆர். ரிட்சி வானு, 28 வயது நவின் நைனல் வானு இருவரும் மாணவரான 23 வயது டான் சின் சியாங், தாளவாத்திய பயிற்றுவிப்பாளரான 25 வயது ஜோ‌ஷுவா ஐப் மேத்யூ (மேல் படங்கள்) ஆகியோ ருடன் சேர்ந்து ராஃபிள்ஸ் பொலிவார்ட் சாலையில் அமைந் துள்ள பேங் பேங் இரவு விடுதிக்கு வெளியே 2016ஆம் ஆண்டு பிப்ரவரி 13ஆம் தேதி காலை 5.15 மணிக்குத் தாக்குதலை மேற்கொண்டனர். கடந்த திங்கட்கிழமை நால்வரும் நீதிமன்றத்தின் தங்கள் குற்றங்களை ஒப்புக்கொண்டனர்.

போலிஸ்காரர் ஒருவரைத் தாக்கிய நைஜல் வானுவுக்கு மூன்று மாதம், நான்கு வாரங் கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மாணவரான அவரது தம்பி, ஜோ‌ஷுவா, டான் ஆகியோருக்கு தலா மூன்று மாதச் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. தண்டனைக்கு முன்னதாக தங்கள் சொந்த விவகாரங் களை நிறைவேற்ற கோரிய நால்வருக்கும் தலா $15,000 பிணை அனுமதிக்கப்பட்டது. அவர்கள் நால்வரும் அடுத்த மாதம் 2ஆம் தேதியன்று அரசு நீதிமன்றத்தில் சிறை தண்டனையைத் தொடங்க முன்னிலையாக வேண்டும்.