விரைவில் வட்டார பொருளியல் பங்காளித்துவ உடன்பாடு

விரைவில் வட்டார பொருளியல் பங்காளித்துவ உடன்பாடு

1 mins read
9ed6be14-1aa4-4287-bb70-08789f69ef2c
-

முழுமையான வட்டார பொருளியல் பங்காளித்துவ உடன்பாட்டுக்கு விரைவில் இறுதி வடிவம் கொடுக்க ஆசியான், இந்தியாவின் தலைவர்கள் விருப்பம் தெரிவித்து உள்ள நிலையில் அதற்காக அவர் கள் முனைப்பாக முயற்சி எடுக்க வேண்டும் என்று பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார். அந்த உடன்பாட்டை விரைவில் இறுதிப்படுத்த வேண்டும் என்று ஆசியான் தலைவர்கள் வலியுறுத் திக் கூற, இந்தியப் பிரதமர் நரேந் திர மோடி தானும் தனது பங்குக்கு ஆவன செய்யப் போவதாக உறுதி அளித்துள்ளார் என்றும் திரு லீ சொன்னார்.

இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளுக்கு மேற்கொண்ட ஆறு நாள் பயணத்தின் முடிவில் பிர தமர் லீ, நேற்று சிங்கப்பூர் செய் தியாளர்களிடம் பேசினார். "உடன்பாட்டுக்கு விரைவில் இறுதி வடிவம் கொடுக்கப்படும் என்று நான் உறுதியாக சொல்ல முடியாது. இருப்பினும், இதர ஆசி யான் தலைவர்கள் அதில் உறுதி யாக உள்ளனர்," என்று திரு லீ விவரித்தார். முழுமையான வட்டார பொரு ளியல் பங்காளித்துவ உடன்பாடு, ஆசியான், இந்தியா, சீனா, ஜப் பான், ஆஸ்திரேலியா, தென் கொரியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளை தடையற்ற வர்த்தகம் மூலம் ஒன்றிணைக்கும்.