அதிபர் ஹலிமா யாக்கோப்: ஒருவருக்கொருவர் கலந்துறவாட வேண்டும்

அதிபர் ஹலிமா யாக்கோப்: ஒருவருக்கொருவர் கலந்துறவாட வேண்டும்

1 mins read
b7b5a9f8-af88-483a-80df-6c4af061717f
-

முஹம்மது ஃபைரோஸ்

குடியிருப்புப் பேட்டைகள், தேசிய சேவை, உணவு அங்காடிகள், பள்ளிகள் என எந்த இடமாக இருந்தாலும் சிங்கப்பூரர்கள் ஒருவருக்கு ஒருவர் கலந்துறவாடி தங்களுக்கு இடையே பரஸ்பர மரியாதையை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்று அதிபர் ஹலிமா யாக்கோப் கூறியுள்ளார்.

பல்வேறு சமூகங்கள் ஒருவரை ஒருவர் நன்கு புரிந்துகொள்ள நாட்டம் காட்ட வேண்டும் என்ற அவர், இனம், சமயம் தொடர்பான விவகாரங்கள் எப்போதும் உணர்வு பூர்வமானவை என்றாலும், அவற்றைப் பற்றி நாம் பேசாமலோ ஒருவர் மற்றொருவரின் கண் ணோட்டத்தைப் பற்றி அறிந்து கொள்ளாமலோ இருந்து விடக்கூடாது என்றார்.

பல இனங்கள், சமயங்களுக்கு இடையில் நிலவும் பன்முகத் தன்மையை அரவணைப்பதே சிங் கப்பூருக்கு வலிமை சேர்க்கிறது என்றும் பயங்கரவாதத் தாக்குதல் போன்ற நெருக்கடி காலத்தை எதிர்கொள்ள இது உதவும் என்றும் அவர் விவரித்தார்.

மாநாட்டில் சிறப்புரை ஆற்றிய அதிபர் ஹலிமா யாக்கோப். தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்