சிலேத்தாரில் புதிய பேருந்து பணிமனை

1 mins read
d414d0c5-09a3-4b8d-b12e-5eabcef02348
-

இவ்வாண்டு மார்ச் மாதம் சிலேத் தார் பேருந்து போக்குவரத்துத் திட்டம் தொடங்கவுள்ளது. அதற்கு சேவை செய்வதற்காக இயோ சூ காங் கிரெசெண்டில் புதிய பேருந்து பணிமனை ஒன்று நேற்று திறந்து வைக்கப்பட்டது. நிலப்போக்குவரத்து ஆணை யம் கட்டிய அந்த பணிமனை கிட்டத்தட்ட 96,000 சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்டது. எஸ்பிஎஸ் டிரான்சிட் நிறுவனத் தால் நிர்வகிக்கப்படும் அந்தப் பணிமனையில் கிட்டத்தட்ட 530 பேருந்துகளை நிறுத்தக்கூடிய வசதியைக் கொண்டது.

26 பேருந்து சேவைகளைக் கொண்ட சிலேத்தார் பேருந்துப் போக்குவரத்துத் திட்டத்துக்கு ஆதரவாக இந்த பேருந்து முனையம் செயல்படும். இந்த சிலேத்தார் பேருந்து போக்கு வரத்துத் திட்டத்துக்கான ஏலக் குத்தகையை எஸ்பிஎஸ் டிரான்சிட் நிறுவனம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கைப்பற்றியது. அரசு ஏலக்குத்தகை திட்டத்தின் கீழ் செயல்படும் இந்த சேவைகள் ஒரு தொகுப்பாக ஒன்றிணைக்கப்பட்டு ஏலத்துக்கு விடப்பட்டன.