8.8 கிலோ ஹெராயின்; 3 ஆண்டுகளில் ஆக அதிகம்

8.8 கிலோ ஹெராயின்; 3 ஆண்டுகளில் ஆக அதிகம்

1 mins read

கடந்த மூன்று ஆண்டுகள் காணாத அளவாக மொத்தம் 8.8 கிலோகிராம் எடை ஹெராயின் கடந்த வெள்ளிக் கிழமை பிடிபட்டது என மத்திய போதை ஒழிப்புப் பிரிவு நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது. வெறும் 15 கிராம் ஹெராயின் கடத்துபவருக்கு சிங்கப்பூரில் மரண தண்டனை விதிக்கப் படுகிறது. போதைப் பொருள் கடத்தும் சந்தேகத்தின் பேரில் 32 வயதுடைய சிங்கப்பூர் ஆடவ ரையும் 35 வயதுடைய மலேசிய ஆடவரையும் மத்திய போதை ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள் கடந்த வெள்ளிக் கிழமை நோட்டம் பார்த்தனர்.

ஹார்பஃபிரண்ட் நிலையத் தைச் சுற்றி அதிகாரிகள் அந்த இருவரையும் கண்காணித்து வந்தனர். அப்போது அந்த இரு ஆடவர்களும் ஹார்பர்ஃபிரண்ட் 2ல் உள்ள கழிவறை ஒன்றில் நுழைந்து சிறிது நேரம் கழித்து தனித்தனி வழிகளில் சென்று விட்டனர். சிங்கப்பூர் ஆடவர் தமது காருக்குத் திரும்பியபோது இன்னொரு சிங்கப்பூர் ஆடவருடன் சேர்த்து அங்கு கைது செய்யப்பட்டனர். காரில் 2.2 கிலோகிராம் ஹெராயின், 460 கிராம் 'ஐஸ்' எனப்படும் மெத்தமிட்டமைன், 70 எரிமின்=5 மாத்திரைகள் ஆகியவை பிடி பட்டன.

ஹார்பர்ஃபிரண்ட் நிலையத் தில் பணிபுரிந்த மலேசிய ஆடவரிடம் 6.6 கிலோகிராம் ஹெராயின் பிடிபட்டது. பிடிபட்ட போதைப்பொருள் களின் மொத்த மதிப்பு சுமார் $666,000 இருக்கும் என்று மத்திய போதை ஒழிப்புப் பிரிவு தெரிவித்தது.