'என்யுஎச்' பைனியர் பலதுறை மருந்தகம் திறப்பு

'என்யுஎச்' பைனியர் பலதுறை மருந்தகம் திறப்பு

2 mins read

ஜூரோங் வெஸ்ட் குடியிருப் பாளர்களுக்குக் கட்டுப்படியாகக் கூடிய சுகாதாரச் சேவைகளை வழங்க அங்கு புதிய பைனியர் பலதுறை மருந்தகம் நேற்று அதிகாரபூர்வமாகத் திறக்கப் பட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாகத் தொடங்கிய அந்தப் பலதுறை மருந்தகத்தின் கட்டு மானப் பணிகள் தொடங்கின. பைனியர் எம்ஆர்டிக்கு மிக அருகில் உள்ள பயனியர் பலதுறை மருந்தகத்தில் இயன் முறை மருத்துவம், நாட்பட்ட நோய்க்கான சிகிச்சை உட்பட பலதரப்பட்ட மருத்துவ சேவை களை வழங்கும்.

சுகாதார அமைச்சர் கான் கிம் யோங் நேற்று மருந்தகத்தை அதிகாரபூர்வமாகத் திறந்து வைத்தார். தேசிய பல்கலைக்கழக மருந்தகங்கள் குழுமத்தின் முதல் பலதுறை மருந்தகம் இது. இது போல புக்கிட் பாத்தோக், சுவா சூ காங், கிளமெண்டி, ஜூரோங், குவீன்ஸ்டவுன் ஆகிய வட்டாரங்களிலும் 2020 சுகாதார பெருந்திட்டத்தின் கீழ் அடுத்த 2020ஆம் ஆண்டுக்குள் பல துறை மருந்தகங்கள் கட்டப் படும் என அமைச்சர் கான் தெரிவித்தார்.

"இப்புதிய மருந்தகத்தால் தரமான, ஒருங்கிணைந்த, தடையற்ற சுகாதார பராமரிப்பை ஜூரோங் வெஸ்ட் வட்டார வாசிகள் பெறலாம். சிங்கப் பூரர்களின் சுகாதாரத் தேவை களைப் பூர்த்தி செய்யும் நமது ஆரம்ப சுகாதாரத் திட்டத்தை வலுவாக்கும் பயணத்தில் இது ஒரு முக்கிய மைல்கல்," என்று திரு கான் கூறினார். ஏழு மாடிகளைக் கொண்ட பயனியர் பலதுறை மருந்தகம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் செயல்பட்டு வருகிறது. இது வரை சராசரியாக ஒரு நாளுக்கு 700 நோயாளிகளுக்கு பைனியர் பலதுறை மருந்தகம் சிகிச்சை அளித்து வந்துள்ளது. மேலும் இதுவரை 90,000க்கும் மேற்பட்ட நோயாளிகள் மருந்தகத்தில் சிகிச்சை பெற்றுள்ளனர்.