சைனாடவுனில் சுற்றுப்பயணி மீது மோதிய மின்-ஸ்கூட்டர்

1 mins read
43ba8cbc-75bf-4fc7-a4f0-3a675958c4c2
-

சைனாடவுன் எம்ஆர்டி நிலையத்தில் தைவானைச் சேர்ந்த 45 வயது சுற்றுப்பயணி ஒருவர் மீது மின்-ஸ்கூட்டர் மோதியதை அடுத்து, மின்-ஸ்கூட்டரை ஓட்டிச் சென்ற 34 வயது ஆடவர் கைது செய்யப்பட்டார். நேற்று முன்தினம் மாலை 3.54 மணியளவில் இந்த சம்பவம் நிகழ்ந்ததாக போலிசார் தெரிவித்தனர். கணவர், மகளுடன் சிங்கப்பூருக்கு வந்த சுற்றுப்பயணி மீது மின்-ஸ்கூட்டர் மோதியதில் அவருக்கு தலையில் அடிபட்டது. அவர் கூ டெக் புவாட் மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் எனவும் சாவ்பாவ் குறிப்பிட்டது. நெரிசல் அதிகமான இடங்களில் மின்-ஸ்கூட்டரை தள்ளிச் செல்வது நல்லது என்று போலிசார் அறிவுறுத்தினர். படம்: ‌ஷின் மின்