'இல்லம் சார்ந்த மூத்தோர் பராமரிப்பு வரவேற்கத்தக்கது'

'இல்லம் சார்ந்த மூத்தோர் பராமரிப்பு வரவேற்கத்தக்கது'

1 mins read

முதிய வயதினருக்கு இல்லத்தில் இருந்தபடி பராமரிப்பு கிடைக்க வழி செய்யும் யோசனை வரவேற் கத்தக்கது என்று சிலர் கூறியுள் ளனர். நோயால் பாதிக்கப்பட்டவர்கள், நடைப்புழக்கம் அதிகம் இல்லாத வர்கள் ஆகியோருக்கு வீட்டில் உதவக்கூடிய வசதிகளையும் சேவைகளையும் மேம்படுத்துவது குறித்து ஆராயப்பட்டு வருகிறது என்று சுகாதார அமைச்சர் கான் கிம் யோங் பேட்டி ஒன்றில் கூறி யதை நேற்றைய 'தி சண்டே டைம்ஸ்' செய்தித்தாள் வெளியிட்டி ருந்தது.

இவ்வாறு செய்வதால், தாதிமை இல்லத்தில் பெரும்பாலும் கிடைக் கப்பெறும் உணவு, சிகிச்சை என்று இல்லாமல், உடலியல், வெவ்வேறு வகையான நடைப்புழக்கமின்மை அல்லது மனநலப் பிரச்சினை உள்ள முதியோர் வீட்டில் இருந்த படியே சுதந்திரமாக அவை தொடர் பான பராமரிப்பைப் பெற்றுக் கொள் ளலாம்.

ஒரே வீட்டில் தங்கி, அதன் வசதிகளை ஒன்றாகப் பயன்படுத் திக்கொள்ளும் முதியோருக்கு இந்த வசதி மிகவும் ஏதுவாக இருக்கும்.