மகிழ்ச்சியான திருமணமும் குடும்பமும்

மகிழ்ச்சியான திருமணமும் குடும்பமும்

1 mins read

ஹவ்காங் 'ஃபேமிலி லைஃப் சாம்பியன்' அமைப்பும் 'சன்லவ்' இல்லமும் சேர்ந்து 'மகிழ்ச்சியான திருமணமே மகிழ்ச்சியான குடும்பம்' எனும் தலைப்பிலான நிகழ்ச்சியை நேற்று முன்தினம் சன்லவ் இல்லத்தில் நடத்தியது. இந்நிகழ்ச்சியில் 130 ஜோடிகள் தங்கள் திருமண பந்தத்தை மறுவுறுதிப்படுத்தினர். அவர்களில் ஆக வயது முதிர்ந்த தம்பதிக்கு வயது 89, 86. ஆக வயது இளமையான தம்பதிக்கு வயது 35. இந்நிகழ்ச்சி சிங்கப்பூர் சாதனைப் புத்தகத்திலும் இடம்பெற்றது.