சைனா டவுனுக்கு அருகில் உள்ள தெலுக் ஆயர் ஸ்திரீட்டில் உள்ள சுவரில் வரையப்பட்டிருந்த அக்கா லத்து சீன வர்த்தகக் கப்பலை தங்கள் கைபேசி மூலம் பார்ப்போர் அது உயிர்பெற்று வருவதைப் போல உணர்ந்தார்கள். இதுபோன்ற மெய்நிகர் தொழில் நுட்ப உத்திகள் நேற்று நடைபெற்ற இவ்வாண்டின் முதலாவது கார் களற்ற ஞாயிறு தினத்தில் மக்க ளைக் கவர்ந்தது. உள்ளூர் நிறுவனமான 'எல்டி ஆர் டெக்னாலஜி' அறிமுகப்படுத் திய 'லோகோமோல்' செயலி மூலம் வருகையாளர்கள் சிங்கப்பூ ரின் வரலாற்றை முப்பரிமாண வரைகலை, புகைப்படச் சவால், காணொளிகள் மூலம் தெரிந்து கொண்டார்கள்.
நேற்றுக் காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை தெலுக் ஆயர் ஸ்திரீட் உட்பட குடிமை வட்டாரச் சாலைகள் போக்குவரத் துக்கு மூடப்பட்டன. அச்சாலைக ளில் பல்வேறு குதூகல நடவடிக் கைகள் நடைபெற்றன. கார்களற்ற ஞாயிறு மூன்றாம் ஆண்டாக வலம் வருகிறது.
முதலாவது கார்களற்ற ஞாயிற்றுக்கிழமையான நேற்று 50 வயதாகும் உள்வடிவமைப்பாளர் திரு மேத்யூ கோ (இடது) 'மெக்ஸ்' எனும் தனது நாயை ஒரு சிறு வண்டியில் வைத்து இழுத்துச் செல்கிறார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

