தனிப்பட்ட விவரங்களைத் தந்த 'தரவு வியாபாரி'க்கு $6,000 அபராதம்

தனிப்பட்ட விவரங்களைத் தந்த 'தரவு வியாபாரி'க்கு $6,000 அபராதம்

1 mins read

தனிநபர் தரவு பாதுகாப்புச் சட்டம், 2014ஆம் ஆண்டு ஜூலை 2ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, தனிநபர் தரவு பாதுகாப்பு ஆணையம் முதலாவது 'தரவு வியாபாரி'யைச் சட்டத்துக்கு முன் நிறுத்தியுள்ளது. மக்களின் கைபேசி எண், அடையாள அட்டை எண் போன்ற தனிப்பட்ட தரவுகளை மற்றவர்களுக்கு விற்று பணம் சம்பாதிப்பவரை 'தரவு வியாபாரி' என்று கூறுவர். அந்த வகையில் ஆணையம், தொலைபேசி மூலம் பொருட்களை விற்கும் முன்னாள் விற்பனையாளரான ஷேரன் ஆஸ்யா கட்ரியா டெங் என்பவருக்கு இம்மாதம் 11ஆம் தேதியன்று $6,000 அபராதம் விதித்தது.

ஷேரன், சம்பந்தப்பட்ட நபர்களிடமிருந்து அனுமதி பெறாமல் அவர்களின் தனிப்பட்ட விவரங்களை மற்றவர்க ளுக்கு விற்றுள்ளார். 2012ஆம் ஆண்டில் அவர் தொலை பேசி மூலம் பொருட்களை விற்கும் வேலையைச் செய்து கொண்டிருந்தபோது, தனது வாடிக்கையாளர்களின் பெயர், அடையாள அட்டை எண்கள், கைபேசி எண்கள், வருடாந் திர வருமான விவரங்கள் போன்ற ஒவ்வொரு தகவலுக்கும் 20 முதல் 30 காசு வரை கொடுத்து வாங்கி வைத்து, அவற்றைக் கொண்டு தனது வேலையில் வாடிக்கையாளர் களைத் தொடர்புகொண்டார். இப்படியாக 2014ஆம் ஆண்டு ஜூன் மாதத்துக்குள் 30,994 தனிப்பட்ட தகவல்களைச் சேகரித்தார். 2012லிருந்து கடந்த ஆண்டு பிப்ரவரி வரை தனிப்பட்ட தகவல்களை விற்று, ஷேரன் $5,000 வரை சம்பாதித்திருந்தார்.