உணவுப் பொருட்கள் பற்றி குறைவான விழிப்புணர்வு

உணவுப் பொருட்கள் பற்றி குறைவான விழிப்புணர்வு

1 mins read

அடைத்து வைக்கப்பட்ட உணவுப் பொருட்களில் மறைந் திருக்கும் இனிப்பின் அளவைத் தெரிந்துகொள்வதில் 90 விழுக் காட்டு இளையர் போதுமான ஆர்வமின்றி இருப்பதாக சிங் கப்பூரில் நடத்தப்பட்ட புதிய ஆய்வு தெரிவிக்கிறது. அன்றாடம் பயன்படுத்தும் அத்தகைய உணவுப் பொருட் களில் மறைந்திருக்கும் இனிப்பு எந்த அளவில் இருக்கிறது என்பதன் மீதான அவர்களின் விழிப்புணர்வு விகிதம் குறை வானது முதல் மிதமானது வரையிலேயே இருப்பதாக நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய அந்த ஆய்வு குறிப் பிடுகிறது.

உணவு, பானங்களில் அவற்றின் தயாரிப்பாளர்கள், சமையற்காரர்கள் அல்லது பய னீட்டாளர் ஆகியோர் சேர்க்கும் இனிப்பு மறைந்திருக்கும் இனிப்பாகக் கருதப்படுகிறது. அல்லது தேன், சர்பத், பழச்சாறுகள், பழச்சாறுகளின் செறிவூட்டல் போன்றவற்றில் இருக்கும் இனிப்பும் மறைந் திருக்கும் இனிப்பாகும். வெவ்வேறு எட்டு வகை யான இனிப்புத் தெரிவுகளைக் காட்டியபோது பெரும்பாலான பல்கலைக்கழக மாணவர்களால் அவற்றைக் கண்டறிய இயலவில்லை என்கிறது ஆய்வு. மேலும், அடைத்துவைக் கப்பட்ட தயாரிப்புகளின் மீது அச்சிடப்பட்டிருக்கும் மூலப் பொருட்களின் பட்டியலையோ ஊட்டச்சத்து விவரங்களையோ போதுமான நேரமின்மை கார ணமாக அவர்கள் சோதனை யிடுவது இல்லை என்றும் அது குறிப்பிடுகிறது. அவ்வாறு சோதனையிடு வதை பெரியதொரு முயற்சி யாக அவர்கள் கருதுவதே அதற்குக் காரணம்.