பொய் முகவரி: பெற்றோருக்கு அபராதம்

பொய் முகவரி: பெற்றோருக்கு அபராதம்

1 mins read

பிரசித்தி பெற்ற தொடக்கப்பள்ளி ஒன்றில் தங்களது பிள்ளையைச் சேர்ப்பதற்காக வேண்டுமென்றே தவறான முகவரியைக் கொடுத்த பெற்றோருக்கு நேற்று அபராதம் விதிக்கப்பட்டது. அரசாங்க ஊழியர் ஒருவரிடம் தவறான தகவலை வழங்கியதற் காக அப்பிள்ளையின் 36 வயது தாயாருக்கு $5,000 அபராதம் விதிக்கப்பட்டது. சிராங்கூன் கார்டன்ஸ் அக்கம் பக்க காவல் நிலையத்தின் பதிவக அதிகாரியிடம் தவறான முகவரி யைத் தந்ததற்காக அந்தப் பெண் ணின் 39 வயது கணவருக்கு $4,000 அபராதம் விதிக்கப்பட்டது. பிள்ளையின் அடையாளத்தைப் பாதுகாப்பதற்கு அந்தத் தம்பதி யரின் பெயர்கள் குறிப்பிடப்பட வில்லை.

கடந்த 2014ஆம் ஆண்டு மே 1ஆம் தேதி, அத்தம்பதியர் சிராங்கூன் கார்டன்ஸ் பகுதியில் வசித்தபோதிலும் வீட்டு முகவரி பீஷானில் உள்ளது என்று அதிகாரியிடம் பொய் கூறியதாக அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர் ஷாஹ்லா இக்பால் கூறினார். அந்தத் தம்பதியர் கூறியதற்கு ஏற்ப போலிஸ் அதிகாரி அவர் களுடைய அடையாள அட்டையில் உள்ள முகவரியை பீஷான் முகவரிக்கு மாற்றினார்.