'அமைதியான காலங்களில் உளவியல் தற்காப்பு முக்கியம்'

'அமைதியான காலங்களில் உளவியல் தற்காப்பு முக்கியம்'

1 mins read

அமைதியான காலங்களில் ஆக முக்கியமான தற்காப்பு உளவியல் தற்காப்பே என இரண்டாம் தற்காப்பு அமைச்சர் ஓங் யி காங் தெரிவித்துள்ளார். பயங்கரவாதம், இணையத்தில் போலித்தன்மை, உலகமயப் போக்கின் பின்வாங்கல் போன்ற மிரட்டல்களை உலகம் எதிர் நோக்கும் இன்றைய சூழலில், உளவியல் தற்காப்பு இன்றியமை யாதது என்றார் அவர். உளவியல் தற்காப்பில் மக்க ளுக்கு இடையிலான நம்பிக்கையும் அரசாங்கத்தின் மீதான நன்னம் பிக்கையும் பிரிவினையைத் தூண்ட முற்படும் சக்திகளுக்கு எதிரான மீள்திறனும் உள்ளடங்கும். பூசல்கள் வழக்கத்திற்கு மாறானவையாக மாறி வருவதோடு, ஆயுதங்கள் ராணுவமற்றவையாகி, எதிரிகள் நாட்டின் பிரதிநிதிகளாக இல்லாத நிலைமை உருவெடுப் பதால் உளவியல் தற்காப்பு அதிமுக்கியம் என்று அவர் விளக்கினார்.

அனைத்துலக உத்திபூர்வக் கல்விக் கழகத்தின் ஆறாவது ஃபுல்லர்டன் மாநாட்டில் திரு ஓங் நேற்று சிறப்புரை ஆற்றினார். தற்காப்பு அதிகாரிகள், மூத்த ராணுவ அதிகாரிகள், கல்வி யாளர்கள் ஆகியோரின் முன்னி லையில் ஆற்றிய 20 நிமிட உரை யின்போது, உலகம் எதிர்நோக்கும் நான்கு சவால்களைத் திரு ஓங் விவரித்தார். கொரிய தீபகற்பத்தின் உத்தேச நிலைத்தன்மையின்மை, பயங்கர வாதம், இணையத்தில் போலித் தன்மை, உலகமயப்போக்கின் பின்வாங்கல் ஆகியன அவை. "உளவியல் தற்காப்பை அமைதியான காலங்களின் ஆக முக்கியமான தற்காப்பு உத்தியாகக் கருதுகிறோம்," என்றார் கல்வி அமைச்சருமான (உயர்கல்வி, திறன்கள்) திரு ஓங்.