மொழிபெயர்ப்புத் துறையில் பணி புரிவோருக்கு தங்கள் திறன்களை மேம்படுத்திக்கொள்ள புதிய மொழிபெயர்ப்புத் திறன் மேம்பாட் டுத் திட்டத்தின்கீழ் கூடுதல் ஆதரவு கிடைக்கவுள்ளது. உள்ளூர் மொழிபெயர்ப்பாளர் கள் தங்கள் கல்வித் தகுதிகளை மேம்படுத்திக்கொண்டு தங்கள் துறையில் வல்லமை பெறுவதற்கு ஊக்குவிப்பதுடன் அடுத்த தலை முறை மொழிபெயர்ப்பாளர்களை உருவாக்கும் நோக்கத்தில் இத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
தேசிய மொழிபெயர்ப்புக் குழு இணைந்து வழங்கும் இந்த மொழிபெயர்ப்பு திறன் மேம்பாட்டு மானியத்தின் மூலம் மொழி பெயர்ப்பு, உடனுக்குடன் மொழி பெயர்ப்பு, மொழி தொடர்பான கல்வித் திட்டங்கள், பயிற்சி வகுப்புகள், பயிலரங்குகள் போன்ற வற்றின் கட்டணத்தில் 90 விழுக் காடு வரை மானியம் பெறலாம். சிங்கப்பூரில் அல்லது வெளி நாடுகளில் வழங்கப்படும் குறுகிய கால வகுப்புகள், பயிலரங்குகள் அல்லது பட்டயம், இளங்கலை, முதுகலை, முதுகலைப் பட்டயம் ஆகிய படிப்புக்காகவும் இந்த மானியத்தைப் பெற விண்ணப் பிக்கலாம். ஒருவர் எத்தனை திட்டங் களுக்கு வேண்டுமானாலும் மானி யம் பெற விண்ணப்பிக்கலாம். ஒவ்வொரு தனிநபருக்கும் அதிக பட்சமாக $10,000 வரை மானியம் வழங்கப்படலாம். குறைந்தது மூன்று ஆண்டுகள் மொழிபெயர்ப்புத் துறையில் அனு பவம் உள்ள சிங்கப்பூரர்களுக்கு இந்த திட்டம் பொருந்தும்.

