உணவுத் தாம்பாளத்திற்கு வைப்புத்தொகை

உணவுத் தாம்பாளத்திற்கு வைப்புத்தொகை

1 mins read
1ef190f4-ffca-4316-9524-d7ca9d086df4
-

உணவங்காடி நிலையத்தில் சாப் பிட்ட பிறகு தட்டுகளை அப்படியே உணவுத் தாம்பாளத்தோடு மேசை மீது வைத்துவிட்டுச் செல்லும் பழக்கத்திற்குக் கூடிய விரைவில் கட்டணம் விதிக்கப்படவுள்ளது. உற்பத்தித்திறனை உயர்த்தவும், உணவுத் தாம்பாளத்தைத் திருப் பித் தருமாறு வாடிக்கையாளர்களை ஊக்குவிக்கவும், 25 உணவங்காடி நிலையங்களில் உணவுத் தாம்பா ளத்தைத் திருப்பித் தருவதற்கான தானியக்கச் சாதனம் நிறுவப்படும். வாடிக்கையாளர்கள் உணவை வாங்கும்போது உணவுத் தாம்பா ளத்திற்கான வைப்புத்தொகையை யும் செலுத்த வேண்டும். தானியக் கச் சாதனத்தில் உணவுத் தாம்பா ளத்தைத் திருப்பித் தந்தவுடன் வைப்புத்தொகை திரும்பக் கிடைத்துவிடும். இதன்வழி, துப் புரவாளர்கள் மேசையைச் சுத்தம் செய்வதில் மட்டுமே கவனம் செலுத்தி, விரைவாக மேசைகளைச் சுத்தம் செய்துவிடலாம்.

மார்சிலிங் மால் உணவங்காடி நிலையத்தில் 50 காசு வைப்புத் தொகையும் புக்கிட் மேரா உண வங்காடி நிலையத்தில் $1 வைப்புத் தொகையும் விதிக்கப்படுகிறது. இவ்விரு உணவங்காடி நிலையங்க ளிலும் தானியக்கச் சாதனமும் மத்திய பாத்திரம் கழுவும் சேவை யும் முதன்முதலாக அமலாக்கப் பட்டுள்ளன.

உணவுத் தாம்பாளத்தைத் திரும்பப் பெற்றுக்கொள்ளும் தானியக்கச் சாதனத்தை சுற்றுப்புற நீர்வள மூத்த துணை அமைச்சர் டாக்டர் ஏமி கோர் பரிசோதித்துப் பார்க்கிறார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்