பிள்ளையைச் சேர்க்க பொய் முகவரி: அமைச்சு எச்சரிக்கை

பிள்ளையைச் சேர்க்க பொய் முகவரி: அமைச்சு எச்சரிக்கை

2 mins read

ஒரு குறிப்பிட்ட தொடக்கப்பள்ளி யில் தங்கள் பிள்ளைகளுக்கு முன்னுரிமை இடம்பெறுவதற்காக பொய்யான வீட்டு முகவரியைத் தெரிவிக்கும் பெற்றோர்களின் பிள்ளைகள் வேறொரு பள்ளிக்கு மாற்றப்படக்கூடும் என்று கல்வி அமைச்சு எச்சரித்து இருக்கிறது. பீஷானில் இருக்கும் பிரபல மான தொடக்கப்பள்ளிக்கூடம் ஒன்றில் தன்னுடைய பெண்ணுக்கு முன்னுரிமை இடம் கிடைக்க வேண்டும் என்பதற்காக அந்தப் பள்ளிக்கூடத்தின் துணை முதல் வரிடம் தவறான வீட்டு முகவரி யைத் தெரிவித்ததற்காக திங்கட் கிழமை 36 வயது மாது ஒருவருக்கு $5,000 அபராதம் விதிக்கப்பட்டது.

போலிஸ் அதிகாரியை அணுகி தங்கள் அடையாள அட்டைகளில் வீட்டு முகவரியை மாற்ற முயன்ற அந்த மாதின் கணவருக்கு $4,000 அபராதம் விதிக்கப்பட்டது. "இந்த விவகாரத்தைப் பொறுத்தவரை பெற்றோர்கள் குற்றவாளி என்று தீர்ப்பாகி இருக் கிறது. இவர்களின் பிள்ளை ஏற் கெனவே தவறான தகவல்களின் அடிப்படையில் ஒரு பள்ளிக்கூடத் தில் பதியப்பட்டிருக்கும் பட்சத்தில், அந்தப் பிள்ளை, வேறொரு பள்ளிக்கு மாற்றப்படலாம் என்று கல்வி அமைச்சு தெரிவித்தது. இந்த வழக்கில் தங்களுடைய தண்டனையை எதிர்த்து மேல்முறை யீடு செய்ய பெற்றோருக்கு கால அவகாசம் இருக்கிறது.

ஆகையால் பின்னொரு தேதி யில் அமைச்சு இவர்களின் பிள்ளை தொடர்பில் சரியான முடிவை எடுக்கும். அதுவரையில் இந்தத் தம்பதியின் பெண் அதே பள்ளிக்கூடத்தில் தொடர்ந்து படித்துவருவார் என்று அமைச்சு கூறியது. தொடக்கப்பள்ளி முதல்வகுப்பு மாணவர் பதிவின்போது பொய் யான முகவரியைத் தாக்கல் செய் வதை கல்வி அமைச்சு கடுமை யான ஒன்றாகக் கருதுகிறது. இப்படி யாராவது செய்தால் அந்த விவகாரம் பற்றி புலன்விசா ரணை நடத்துவதற்காக போலிசி டம் அதுபற்றி தெரியப்படுத்தப்படும் என்று அமைச்சு எச்சரித்தது.