ஆலங்கட்டி மழை, சாலையில் வெள்ளம், மரம் விழுந்தது, போக்குவரத்து பாதிப்பு

ஆலங்கட்டி மழை, சாலையில் வெள்ளம், மரம் விழுந்தது, போக்குவரத்து பாதிப்பு

1 mins read
c517681f-241e-494d-80d3-5b5f059a41a1
-

சிங்கப்பூரில் நேற்று மாலை பெய்த கன மழையினால் சிலேத்தார் சாலைப் பகுதியில் வெள்ளம் ஏற் பட்டது. அதேநேரத்தில், தெம்பனிஸ் விரைவுச்சாலையில் இருந்து சிலேத்தார் விரைவுச் சாலைக்குச் செல்லும் இயோ சூ காங் சாலை புறவழிப் பகுதியில் மரம் ஒன்று விழுந்ததை அடுத்து அப்பகுதி போக்குவரத்துக்கு மூடப்பட்டது. இயோ சூ காங் பகுதி போக்கு வரத்துக்கு மூடப்பட்டதாக நிலப் போக்குவரத்து ஆணையம் நேற்று மாலை தெரிவித்தது.

சிலேத்தார் நார்த் லிங்கின் இரு தடங்களிலும் வெள்ளம் ஏற் பட்டதால் அப்பகுதியைத் தவிர்க்கு மாறு வாகன ஓட்டுநர்களுக்கு பொதுப் பயனீட்டுக் கழகம் ஆலோசனை கூறியது. மாலை 5.45 அளவில் வெள்ளம் வடிந்து விட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. இதனிடையே, நேற்று யீ‌ஷூன், சிலேத்தார் உள்ளிட்ட சில பகுதி களில் ஆலங்கட்டி மழை பெய்த தாகவும் தெரிவிக்கப்பட்டது.

கடும் மழை காரணமாக யீ‌ஷூன் ஸ்திரீட் 72ல் உள்ள புளோக் 746ல் மரம் விழுந்தது. படம்: சுஹாய்மி மோஷே