சுகாதார தரச் சேவை விருது: 3,582 பேருக்கு கிடைத்தது

சுகாதார தரச் சேவை விருது: 3,582 பேருக்கு கிடைத்தது

2 mins read
5724d367-6f63-4c6e-9950-50349a32d109
-

இந்த ஆண்டுக்கான சிங்கப்பூர் சுகாதார தரச் சேவை விருதை 3,582 பேர் பெற்றுள்ளனர். விருது பெற்றவர்களில் சுகாதாரப் பராமரிப்புத் துறை நிபுணர்களும் நிறுவனங் களும் அடங்கும். மீடியாகார்ப் நிறுவனத்தின் எம்இஎஸ் அரங்கில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் சுகாதார அமைச்சர் கான் கிம் யோங் கலந்துகொண்டு விருதுகளை வழங்கினார். இந்த விருது இத்துடன் எட்டா வது ஆண்டாக வழங்கப்பட்டு உள்ளது. சிறப்பிக்கப்பட்டோரில் எட்டு பேர் சூப்பர் ஸ்டார் விருது பெற்றனர்.

இந்த ஆண்டில் ஆக அதிக மாக 30 சுகாதாரப் பராமரிப்பு நிறுவனங்கள் பங்கெடுத்தன. அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றும் சுகாதாரப் பரா மரிப்புத் துறை நிபுணர்களுக்கு நிகழ்ச்சியில் அமைச்சர் நன்றி கூறினார். 1,400க்கும் அதிக சுகாதாரப் பராமரிப்பு நிபுணர்களி டம் உரையாற்றிய அமைச்சர், விருது வென்றிருப்போர் கடமைக்கு அப்பாலும் சிறப்பாக செயல்படுவதாகக் குறிப்பிட்டார். விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு சிங்ஹெல்த் டியுக்-என்யுஎஸ் அகடெமி மெடிக்கல் சென்டர் ஏற்பாடு செய்திருந்தது. மூத்த வேலையிட உடற்பயிற்சி சிகிச்சை நிபுணர் குமாரி ஆனந்த ராஜா, 28, நடுத்தரகால, நீண்ட கால பராமரிப்புச் சேவை பிரிவில் சூப்பர் ஸ்டார் விருதை வென்றார். இவர் யோசனையில் உதித்த ஒரு திட்டம், நினைவாற்றல் குறை பாடு உள்ளவர்களின் வாழ்க்கை மேம்படுவதற்கு உதவுகிறது.

அங் மோ கியோ=தை ஹுவா குவான் சமூக மருத்துவ மனையில் நோயாளியோடு மூத்த உடற் பயிற்சி சிகிச்சை வல்லுநர் குமாரி ஆனந்தராஜா. இவருக்கு சூப்பர் ஸ்டார் விருது கிடைத் திருக்கிறது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்