மீண்டும் ரோட்ஸ் உபகாரச்சம்பளம்

மீண்டும் ரோட்ஸ் உபகாரச்சம்பளம்

1 mins read

உலகின் ஆகப் பழமையான முதுநிலைப் பட்டப்படிப்பு உபகாரச்சம்பளமான ரோட்ஸ் படிப்பு உபகாரச்சம்பளம் இந்த ஆண்டு பிற்பகுதியில் மறுபடியும் சிங்கப்பூரர்களுக்கு கிடைக்கவிருக்கிறது. நிதி பிரச்சினை காரணமாக இந்தப் படிப்பு உதவி 2006ல் நிறுத்தப்பட்டது. இந்த உபகாரச்சம்பளம் மறுபடியும் கிடைப்பதற்குத் தோதாக ஏபிஎஸ் அசட் மேனேஜ்மண்ட் என்ற சிங்கப்பூர் நிறுவனம், $7,400,000 அறநிதியை வழங்கியது. இந்த விவரங்களை ரோட்ஸ் டிரஸ்ட் நிறுவனமும் ஏபிஎஸ் நிறுவனமும் நேற்று அறிவித்தன.