உணவகம், சமையல்கூட தரநிலை குறைப்பு ரீஜண்ட் சிங்கப்பூர் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் இருக்கும் சம்மர் பேலஸ் உணவகத்தில் சாப்பிட்ட 43 பேர் பாதிக்கப்பட் டதையடுத்து, அந்த உணவகத்தின் தரநிலை ஏ=லிருந்து சி=க்கு குறைக்கப்பட்டுள்ளது. அந்த ஹோட்டலின் சமையல் கூடத்தின் தரத்தையும் 'சி' நிலைக்கு தேசிய சுற்றுப்புற வாரியம் குறைத்துவிட்டது. அந்த உணவகங்களில் சென்ற ஆண்டு நவம்பர் 11ஆம் தேதி சாப்பிட்ட 43 பேருக்கு வயிற்றுப் போக்கு அறிகுறி ஏற்பட்டு பாதிக் கப்பட்டதாக தேசிய சுற்றுப்புற வாரியம் தெரிவித்தது.
அந்த நிறு வனங்களின் உணவு சுகாதாரத் தரம் 12 மாத காலத்தில் மறுபரி சீலனை செய்யப்படும். அதற்கிடை யில் இந்த வாரியம் அந்த உண வகங்களைக் கண்காணிக்கும். சம்மர் பேலஸ் உணவகம் ரீஜண்ட் சிங்கப்பூர் ஹோட்டலில் அமைந்திருக்கிறது. அந்த ஐந்து நட்சத்திர ஹோட்டல் கஸ்கேடன் ரோட்டில் இருக்கிறது. இந்த உணவகமும் ஹோட்ட லின் சமையல் அறையும் ஏற் கெனவே உணவு சுகாதாரத்தைப் பொறுத்தவரையில் ஏ நிலையில் இருந்தன என்று இந்த வாரியத்தின் இணையத்தளம் தெரிவிக்கிறது. சம்மர் பேலஸ் உணவகம் சென்ற ஆண்டில் மிக்கலின் நட் சத்திர அந்தஸ்தைப் பெற்றது.

